

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Bern Meiringen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஏகாம்பரம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனதா அவர்களின் அன்புக் கணவரும்,
அகல்யா(அடினா), சகானா(அனித்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன்மணி, பரமேஸ்வரி, பேரின்பநாயகி, தவலட்சுமி, கோணேஸ்வரி, கிருஸ்னேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற லோகநாதன், நற்குணசிங்கம், கனகலிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், கோணேஸ்வரன், மதனகாந்தி, மற்றும் ஜெயராணி, ஜீவராணி, காலஞ்சென்ற ராஜசுலோஜனா, வனஜா, சலயா, சுகிர்தா, சசிதரன், காலஞ்சென்ற தியாகராஜா, மாரிமுத்து, தர்மலிங்கம், பொன்னம்மா, சரோஜா, சீமான்சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்க்கல்விக் சேவையின் முன்னை நாள் பள்ளி முதல்வராக நேர்மைக்கு இலக்கணமாக நேரான பாதையில் இருந்து தமிழ்க்கல்விச்சேவையின் மேம்பாட்டுக்காக தனது உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் இறுதிவரை அயராது செலுத்திய...