யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி மற்றும் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குமாரசுவாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த ஐயாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்..?
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர் ஐயா..!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம் ஐயா..!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக வழிநடத்தி
ஆசி செய்யுங்கள் ஐயா..!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!
ஐயாவின் ஆத்மா இறைவன் பாதக் கமலங்களில் சாந்தியடையவும், அவரின் ஆசிகள் அவர்குடும்பத்தோருக்கு கிடைக்கவும் இறையருள் துனண வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி??