

யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Swiss Zurich Dielsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாமாண்டு நினைவலைகளில்..
உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதய்யா!
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்
போல நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையாது...!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...