திதி:17/11/2025
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா லண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கமலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை
மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...
உங்கள் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்.