யாழ். கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தம்பையா பெரியதம்பி
அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து(முன்னாள் தபாலதிபர்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வல்வை கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீவதனி, ஜனனி, ஹிமாலினி, தேவாஞ்சலி, திருவைத்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரன், தணிகாசலம், ஸ்ரீதரன், சுதாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னரத்தினம் குழந்தைவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து, சந்திரவதனா திருப்பதி, சுந்தரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா(தீபன்), ஆனந்தமயூரன்(நிரஞ்சனா), ராஜகுருபரன்(நிதர்ஷிகா), சிவாஜித்ஹர்ஷன், விஜயாதித்யன், ஷியாம்தேவ்(ஸ்ரீகேஷினி), பைரவி, ஹேரம்பன், ஷிவானி, விஷால் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராஹித், சந்தோஷ், ரித்திக் ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என்னுடைய வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க ஒரு வழிகாட்டியாக வல்வை சிதம்பரக் கல்லூரியில் 1974ம் ஆண்டு உங்கள்இருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது நம் பெற்றோர் செய்த பாக்கியம்....