1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி கமலாம்பிகை
வயது 86
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நாச்சிமார் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி கமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில்
விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம் தாயே..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் தாயே...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்