2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கினை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு இரண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில்
நினைத்து
கண்ணீர் சொரிவதைத்
தவிர
எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே அப்பா! .
எங்களின் நிறைவே
உங்களின் வாழ்வு
என்றபடி
ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன்
வாழ வைத்த உங்களை
காலன்
அவன் கவர்ந்து சென்று
எம்மை
கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள்
சுமந்து
உங்கள் வழியில்
உங்கள் பிள்ளைகள்
நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்