யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கௌரவ கலாநிதி கந்தையா சிவபாதம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று Melbourne இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீமதி லக்சுமி சிவபாதம்(தமிழ்ப் பண்டிதர், இளைப்பாறிய ஆசிரியை மற்றும் கொழும்பு சைவ மங்கையர் கழக ஆரம்பப் பாடசாலைத் தலைமையாசிரியை, Retired teacher & Head Mistress of Hindu Ladies college Primary school, Colombo) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவசொரூபன்(பிரான்ஸ்), சக்திசொரூபன்(பொபி- பிரான்ஸ், லண்டன்), நிருத்தசொரூபி(அவுஸ்திரேலியா Melbourne), நாதசொரூபன்(கொழும்பு), அனந்த சொரூபன்(அவுஸ்திரேலியா Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, தங்கமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி, மகாலிங்கம், ஜோன் ரட்ணசிங்கம், திருநாவுக்கரசு மற்றும் ராஜமந்திரி(இலங்கை)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா மகாலிங்கம், Claire ஜோன் ரட்ணசிங்கம், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு, சந்திரமணி ராஜமந்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மகுலேந்திரன்(அவுஸ்திரேலியா Melbourne), ரஜனி(பிரான்ஸ்), மீனா(லண்டன்), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,
சக்தியாயினி, சாரங்கன், ஜோதி, நதர்ஷன், சொரூசன், சத்தியா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடலை பார்வையிட மற்றும் இறுதிக்கிரியை ஆகியவற்றில் கலந்து கொள்வோர் Covid 19 சட்டதிட்டங்களுக்கேற்ப வருகை தருமாறுகேட்டுக் கொள்கின்றோம்.