Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 NOV 1926
இறப்பு 28 JUN 2012
அமரர் கந்தையா பாக்கியம் 1926 - 2012 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாக்கியம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.   

காலன் உங்களை பறித்து
பதின்மூன்று ஆண்டுகள் நீண்டு
 நெடியதாய் கழிந்து போனதே அம்மா!

நீங்கள் எங்களோடு
வாழ்ந்த காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
 பிரிந்த காலமெல்லாம் எங்கள் கண்களில்
 நீர்க்கோலம் வாழ்நாள் முழுவதும்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
 உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா..!!

நீங்கள் எங்களை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
 பல கோடி சென்றாலும் ஆறாது ஆறாது
 நம் நினைவுகள்..!

உயிருக்குள் உயிரான
 ஒளியின் திருமுகமே
 வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
 வீசும் காற்றோடு கலந்திட்ட
மாயமென்ன!

உலகையே எங்களுக்கு
தந்தாலும் உங்களை போல்
 இணை ஆகுமா- அம்மா
 உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்..!

இன்று நீங்கள் இன்றி எங்கள்
 உயிர் விலகி நிற்கின்றது அம்மா..!

ஆண்டுகள் 13
 கடந்தாலும் அமைதியின்றி
வாழ்கிறோம் உங்கள்
நினைவுடனே அம்மா!

 உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
 பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்