Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 SEP 1948
இறப்பு 06 OCT 2026
திரு. கந்தசாமி தர்மரத்தினம்
முன்னாள் முதலாளி- மன்னார் ஈஸ்வரன் ஸ்டோர்ஸ் கடை / வவுனியா குருமன்காடு சியாமளா றேட் சென்டர்
வயது 78
திரு. கந்தசாமி தர்மரத்தினம் 1948 - 2026 வைரவபுளியங்குளம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தர்மரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
 உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
 எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
 தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.