என் கல்லூரி வகுப்புத்தோழன் சௌந்தரராஜன். எப்போதும் சிரித்த முகத்துடன் இலங்கை தமிழில் என்னிடம் பேசுபவர். கல்லூரி முதல் ஆண்டில் மதுரையில் இருக்கும் இலங்கை கல்லூரி மாணவர்கள் கூட்டத்திற்கு என்னை அழைத்து செல்வார். எனக்கு இருக்கும் இலங்கை தமிழர் மீது உள்ள அக்கறையும் ஈடுபாடும் வருவதற்கு அதுதான் வித்தாக இருந்து இருக்கும் என நம்புகிறேன்.
சௌந்தர் சென்னையில் இருக்கும் போது சில முறை சந்தித்து உள்ளேன்.
சென்னை முகப்பேர் இல் இருந்த அவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து உள்ளேன்.
தன் உடலில் பல இன்னலகளை சுமந்து இன்று எங்களை விட்டு பிரிந்ததில் மிக அதிர்ச்சி அடைந்தேன். அவர் குடும்பத்துடன் நானும் என் குடும்பத்தாரும் என் வகுப்பு நண்பர்களும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்.