
பருத்தித்துறை மாதனையை பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி செளந்தரராசா அவர்கள் 01-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சி. கந்தசாமி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பாத்துரை, அமிர்தாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
மித்ரஸ்ரீ(மருத்துவபீட மாணவி, யாழ் பல்கலைக்கழகம்), ரேஷிகா(யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வடிவாம்பிகை, ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சஜிதா, சுந்தரேசன்(லண்டன்), செந்தூரன், சிவநேசன், தனதாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேல்நம்பி(பேராசிரியர்), நிருபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சதுசிகன், தட்ஷா, கஜானன், சாய்னன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
சுவர்மன், சியாமி, பிரணயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.