15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருப்பாலை, விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சோதிமலர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
15 வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள்
உணர்வீர்கள் உணர்ந்து
கொண்டேயிருப்பீர்கள் அம்மா!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன சிந்தை
குளிர சிரிப்பொலி ஒலிக்கும்
அன்பு வதனம் எங்கே?
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
15 வருடம் விரைந்தே போனதம்மா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன்(கணேஸ்) - மகன்
- Contact Request Details