
யாழ். கரவெட்டி துன்னாலை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாலன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
மார்கழி என்றவுடன் மனது துடிக்குமப்பா
பார்க்குமிடமெல்லாம் இன்னும் பாங்காய்த் தெரிகின்றீர்கள்
பார்த்திருந்த கண்களும் பிரிந்து சென்ற வேதனையும்
ஈர்த்து ஈர்த்து எம்மை இயன்றவரை வருத்துதப்பா...
உறுதிமிக்க உங்கள் உள்ளம் இறுதிவரை தளர்ந்ததில்லை
நோயது வந்திடுனும் என்றும் பாயதில் படுத்ததில்லை
உதவியென வந்தோர்க்கு உயிர் கொடுத்துதவினீர்கள்
விதியது வகுத்த கட்டளையாலே சதிமிகு காலனவன் கையினிற் சேர்ந்தீர்கள்
அள்ளிக் கொடுத்தகரம் என்றும் கைநீட்டிப் பெற்றதில்லை
பள்ளத்தில் வீழ்ந்தவர்க்கும் பரிதவித்து உதவினீர்கள்
கள்ளமில்லா மனமும் களங்கமற்ற அன்பும்
உதட்டோரம் உதிர்க்கும் புன்னகையும் காணாது தவிக்கின்றோமப்பா
உங்கள் ஆசைமுகம் காணாது ஏழாண்டு ஆனதப்பா
ஈரேழாண்டானாலும் நீங்காத துயரமிது
மேதியினில் உள்ளவரை நேர்த்தியாய் வாழப்பாதைகள் தந்தீர்கள்
பேரிடர் வந்தாலும் நேர்மையுடன் வாழ்ந்திடுவோம்...
எழுதிய காலம் வந்திட்டால் எம்முயிர் ஒருகணந் தங்கிடுமோ?
தொழுது கெஞ்சிப் பணிந்தாலும் துணிந்து போர்மிகு செய்தாலும்
வழுகிய எம்முயிர் உடலகத்தே வந்து சேருதல் வழக்கதுவோ ?
அழகிய உங்கள் நிளைவுகளை மீட்டியே நாமும் வாழ்ந்திடுவோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி