
திதி: 03-01-2022
யாழ். கரவெட்டி துன்னாலை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாலன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் உயிர் அப்பாவே!
உங்கள் ஆசை முகம் காணாது ஆண்டாறு ஆனதப்பா!
ஆண்டுகள் ஆறோடியும் ஆதரவின்றித்தவிக்கின்றோம்!
அன்பு முகம் காணாது அழுது புலம்புகின்றோம்!
செய்வதறியாமல் தினந்தோறும் துடிக்கின்றோம்!
ஒரு முறையேனும் எமைக்காண வாரும் அப்பா!
வந்து தம் புன்னகையால் எம்குறைகள் தீருமப்பா!
கம்பீரமே கதிகலங்கும் கம்பீரமல்லவா நீங்கள்!
கண்ணிமைக்கும் நேரமதில் கனவாகிப்போனதேனோ!
உதவியென வந்தோர்க்கு உயிர்கொடுத்துதவிய உத்தமனே!
இறுதி மூச்சினிலும் தன்னலம் நினைத்ததில்லை!
பிறர் நலமே பெரிதென்று பெருமையாய் வாழ்ந்தீரப்பா!
புன்முறுவல் பூக்கும் உங்கள் பூமுகத்தைக் காணாது!
இப்புவியதனில் நாள்தோறும் நடைப்பிணமாய் வாழ்கின்றோம்!
எம் கனவெல்லாம் நனவாக்க ஓய்வின்றி உழைத்தவரே!
எம் நனவையெல்லாம் கனவாக்கி கணப்பொழுதில் போனதேனோ!
தாம் செய்த புண்ணியங்கள் தினந்தோறும் தமைக்காக்கும்!
செய்த சேவையாவும் மறுபிறப்பை அறுத்தொழிக்கும்!
ஈசனவன் பாதமதில் தாம் முத்தி அடைந்திருப்பீர்!
எள்ளளவும் சந்தேகம் எமக்கதனில் இல்லையப்பா!
நல் வாழ்வு நாம் வாழ தம் நல்லாசி வேண்டுகின்றோம்!
தம் பெருமை தினம் பேசி நல் நினைவுகளில் வாழ்கின்றோம்!
காட்டிய நேர்வழியில் நாள்தோறும் நடக்கின்றோம்!
நேர்மை நெறி தவறாது நீதியுடன் நாம் வாழ்ந்திடுவோம்!
தம் பெருமை தனைக்காத்து இப்புவியில் சிறந்திடுவோம்!
ஆசிகள் பல தந்து எமைக்காத்து அருளும் அப்பா!
இறையொளியில் கலந்திட்ட எம் குடும்பக் குலவிளக்கே!
தம் உன்னத நினைவுகளை மீட்டி நாம் வாழ்ந்திடுவோம்!
நம் கண்ணீர்ப்பூக்களை நாம் காணிக்கை செய்கின்றோம்!
கனிவான இதயமதில் ஏற்று அருளும் அப்பா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!