1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி பேரின்பநாதன்
(தம்பியண்ணை)
முன்னாள் CTB சாரதி
வயது 66
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி பேரின்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
ஓராண்டு ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்
எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள்
அரவணைப்புக்காக ஏங்குகின்றேன்
தங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
திதி நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
May his soul rest in peace.