
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பேரின்பநாதன் அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுசியா(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்), கஜந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தன், கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், பொன்னம்மா, ஆறுமுகசாமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), சறோசாதேவி(இலங்கை), தேவமலர்(இலங்கை), தேவராசா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணுத்துரை(பிரான்ஸ்), காலஞ்சென்ற குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சானுசா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May his soul rest in peace.