Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 SEP 1941
இறப்பு 07 MAY 2022
அமரர் கந்தசாமி நடராஜா 1941 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, தெல்லிப்பளை, சிலாபம், கொழும்பு, சுவிஸ் St. Gallenஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி நடராஜா அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 04-06-2022 சனிக்கிழமை அன்று காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 06-06-2022 திங்கட்கிழமை அன்று 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் வருகை தந்து, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனம் நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
Coop றோட்,
அளவெட்டி மத்தி அளவெட்டி,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்