Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 SEP 1941
இறப்பு 07 MAY 2022
அமரர் கந்தசாமி நடராஜா 1941 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, தெல்லிப்பளை, சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-04-2023

ஆண்டொன்று ஆனாலும்
 ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்