யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி லீலாவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மறவா நினைவுகள் மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று 31 நாட்கள் ஆனதே
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றோம் உன் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உன் பிரிவால்
வாழ்கின்றோம் உன் நிழலாய்
மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?
உள்ளமிது குமுறுகிறது
உங்கள் மடி தேடி ஏங்குதே
அன்னையே… அன்பு அம்மாவே
எங்கள் ஆருயிரே…
அருவியாய் அழுது தீர்த்தாலும்
ஆறாது தாயே உங்கள் பிரிவு..
இமை மூடும் நேரத்தில் எங்களை விட்டு பிரிந்தாய்
நாங்கள் இருக்கும்வரை
உன் நினைவில்தான் வாழ்வோம் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We miss you Ammamma/Puuti! We will always love you.