
திதி:05/11/2025
யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley Cricklewood ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி குணசீலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!