யாழ். சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley Cricklewood ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி குணசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராறு மாதங்கள் ஆறாக ஓடியதோ
என் தெய்வம் போயிப்போ வருடம் ஒன்றானதோ
ஓராறு கண்ணீரில் எம் பயணம் போயினதோ
செகத்தினிலே எனை வாழவைத்த செல்வமே மன்னவரே
விண்ணுலகு நீர் போக எம் வாழ்க்கை தடுமாற
ஆண்டவனே இது தகுமோ யாரிடம் சொல்லியழ
பொல்லாத வாழ்வினிலே பொன்னான வாழ்விழந்தேன்
நாம் வாழ்ந்த கதை கனவென்று நான் உணர்ந்தேன்
தக்கதுணை உமை பிரிந்து தனி மரமாய் ஆனோம்
போனவழி நான் வருவேன்
வானுலகு போன உம்மை
வையகம் இருக்கும் வரை
உமை மறவோம் உத்தமரே!
அப்பா அப்பா என ஆயிரம் முறை அழைத்தாலும்
ஆசையோ அடங்காது அழைக்கவே மனம் ஏங்கும்
வீடுவெறிச்சோட வேதனையில் நாம் வாட
வேகிறது மனமெமக்கு மகிழ்சியின்றித் துயர் பாட
காடுநீர் போக களிப்பின்றி உமைத்தேட
கண்ணீரே வாழ்க்கையப்பா காட்சிதர வாருமப்பா
எம்மால் முடியவில்லை எம்மப்பா இங்கு வாழ
ஏது வழி எங்களுக்கு நீரின்றி இன்னும் வாழ
ஆண்டொன்று போனதப்பா ஆசைமுகம் பார்த்து
ஆண்டவனைக் கேட்கின்றோம் அப்பா
உமைச்சேர
மீண்டும் நாம் வாழ்வதற்கு கால மொன்று
வாராதோ
வந்திட்டால் வந்து விடும் வள்ளலே எம்மப்பா