1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 OCT 1927
மறைவு 04 FEB 2021
அமரர் கந்தசாமி குணரத்தினம்
ஓய்வுபெற்ற மேலதிக மாவட்ட பதிவாளர் கச்சேரி- யாழ்ப்பாணம்
வயது 93
அமரர் கந்தசாமி குணரத்தினம் 1927 - 2021 சங்கரத்தை வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
 அணையாத தீபத்தைப்போல்
 உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
 நெஞ்சில் எழும் அனலோடு– உன்
 நினைவுகளை சுமந்தபடி
 வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
 ஈர விழியோடு
 வாழ்நாள் முழுவதும் உங்களை 
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றது..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்