Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 JAN 1934
இறப்பு 28 JAN 2024
அமரர் கந்தசாமி அப்புத்துரை
Retired Assistant manager - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு
வயது 89
அமரர் கந்தசாமி அப்புத்துரை 1934 - 2024 நவாலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நவாலி ஆலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி அப்புத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஓருவராகிவிட்ட எங்கள் குடும்பத்தின் தலைவர் அமரர் கந்தசாமி அவர்களின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு அன்பும் ஆதரவும் அவ்வப்போது ஆகாரங்கமும் வழங்கி ஆறுதலளித்த அன்பு உள்ளங்களுக்கும், உலகின் பல்வேறு தேசங்களில் இருந்து தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அனுதாபம் தெரிவித்தவருக்கும், மலர்வளையம், கண்ணீர் அஞ்சலிகளை பகிர்ந்தவர்களுக்கும், Chapel Ridge Funeral home இற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியோறுக்கும், இறுதிக்கிரிகை மற்றும் தகனக்கிரிகைகளில் உடன் இருந்தவர்களுக்கும், எங்களுக்கு பல வகையிலும் உடனிறுந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31 ஆம் நாள் நினைவுக்கிரிகைகள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Toronto திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அச்சமயம் தாங்கள் தம் குடும்ப சகிதம் வருகைதந்து அவரதுஆத்மசாந்தி பிரார்த்தனையில் அதைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
Toronto Thiruchendur Murugan Temple.
 19 Penn Dr, North York, ON M9L 2A7.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.