Clicky

தோற்றம் 24 MAY 1941
மறைவு 05 FEB 2022
அமரர் கந்தசாமி அன்னலட்சுமி 1941 - 2022 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Parththeepa 05 MAR 2022 India

அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவளே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவளே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவளே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை நாம் பிறக்கும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்புக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நான் ஏங்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீங்கள் கண் மூடும் போது என் மனம் பட்ட பாடு யார் அறிவார் வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான் எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள் எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள் வாருங்கள் மீண்டும் இவ்வுலகில் எம்மை காக்க வந்து எமக்கு ஆறுதல் தாருங்கள். தலைவி இல்லாத வீடும் இன்று வெறிச்சோடிக் போய்விட்டது நடக்கின்றோம் நீர் சொல்லித்தந்த பாதைகளில் நடக்கின்றீர் நீரும் நிழலாய் எம்முடன் எப்போதும்.... ?? அம்மம்மா?? என்றும் நினைவுகளுடன் உங்களின் ..தீபா..????