

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி ஆச்சிப்பிள்ளை அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி(முன்னாள் கரைச்சி வடக்கு ப.நோ.கூ. சங்க ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேந்திரன்(ஆசிரியர்), ஜெயந்தி(ஆசிரியை, கிளி/ நாகேந்திர வித்தியாலயம்), கருணாநந்தி(கனடா), புவனேந்திரன்(ராஜி- கச்சேரி கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாதேவி(கரைச்சி வடக்கு ப.நோ. கூ. சங்க பணியாளர்), றபிச்சந்திரராசா, காசிநாதர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசம்மா மற்றும் பாக்கியம், புவனேஸ்வரி(ஆசிரியை), குமாரசாமி(சட்டத்தரணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, தவமணி, குணமணி மற்றும் பரமசாமி, குமாரசாமி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவிந், பிரியந், தட்சயன்(பூநகரி பிரதேசசபை), அபிசயனி, யதுசா, யதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது மகள் இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன்கோயிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
பழையகமம்,
முரசுமோட்டை.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details