Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1938
இறப்பு 23 APR 2020
அமரர் கந்தசாமி தங்கம்மா 1938 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 19-04-2023

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 815 கட்சன்வவீதி வட்டக்கச்சி, 37/2 (2ம் பகுதி) திருவையாறு, இந்தியா புதுக்கோட்டை, மடிப்பாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தங்கம்மா 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது

ஆண்டுகள் மூன்றல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களைமறவோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்