8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா இராசரத்தினம்
முன்னாள் ஐங்கரன் சுருட்டு உரிமையாளர்
வயது 78
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராசரத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம் இன்று
நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்
அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்களை நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
உங்கள் ஆத்மா மானிப்பாய் மருதடி விநாயகரின்
திருவடியில் அமைதி பெற வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்