
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கெங்காதரன்(கண்ணன்), சிவாஜினி(இந்தியா), குமுதினி(பிரான்ஸ்), மாவீரர் மதிவதனி, ரமேஷ்குமார்(ரவி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீதரன்(பிரான்ஸ்), நவரத்தினம்(தவான்- பிரான்ஸ்), கிசோகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னத்துரை, குணரத்தினம், கனகம்மா மற்றும் நாகம்மா, பாக்கியநாதன், சிறீகாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காத்யாயினி, காலஞ்சென்ற பிரசாத், கிரிசாந்தன், வசிகாந்த், பிரியந்தன், தவப்பிரசாந்த், லாவண்யா, மபீசன், சபரீசன், யுவசிறீ ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல.17/8 வட்டார வீதி 3ம் வட்டாரம் நெளுங்குளம் என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.