நெடுந்தீவு மேற்கைப் பூர்வீகமாகவும், யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வள்ளி அக்காவின் இழப்பிற்கு அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடய உபசரிப்பு ஒரு தனி ரகம்.என்றும் மறக்க முடியாது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம். ஓம் சாந்தி ஓம்!!...