யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு விளையாட்டரங்க வீதி கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சின்னராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் கணபதி சின்னராசா அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்தியக்கிரியைகள் 29-03-2023 புதன்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோப்பாய் தெற்கு,
கோப்பாய் விளையாட்டரங்க வீதி,
கட்டப்பிராய்.
உங்கள் வலியை என்னால் போக்க முடியாது என்று எனக்குத்தெரியும். சின்னையா வாழந்த அன்பான ,பாசமான ,பண்பான குணத்திற்கு அவரின் ஆத்மா நிம்மதியாக சாந்தியடையும். சின்னையாவை இழந்து தவிக்கும்...