Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 MAY 1960
மறைவு 07 MAR 2024
அமரர் கணபதிப்பிள்ளை அற்புதராணி
வயது 63
அமரர் கணபதிப்பிள்ளை அற்புதராணி 1960 - 2024 தாவளை இயற்றாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 25-02-2025

யாழ். தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை அற்புதராணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! நீங்கள் மண்ணில் மறைந்து
ஓராண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?

கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்
உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Photos