

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை விசாலாட்சி அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வயிரமுத்து கண்ணம்மா தம்பதிகளின் மூத்த மகளும், வாரித்தம்பி சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வேந்திரராசா(வண்டையா), இராகு, ரவி மற்றும் குலம்(குலா), கலாபத்மினி(கலா), இராஜகுமாரி(ராஜி), நாகேந்திரன்(ரகு ஆதவன் லொறி உரிமையாளார்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேஸ்காந்(சுரேஸ்- லண்டன்) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
நவரத்தினம்(நவம்), ரதிராணி(ராணி), சின்னத்தங்கச்சி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதீஸ்வரி(யோகம்), லோகேஸ்வரன்(லோகன்), தவராசா(தவம்), வசந்தமலர்(மலர்), விக்கினேஸ்வரன்(கண்ணன்), றஜிதா(றஜி) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லம்மா, இராசரத்தினம், பொன்னுத்துரை மற்றும் சின்னத்தங்கம், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசுப்பிரமணியம்(சின்னராசு) மற்றும் குகபாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சறோ, கமலா, தேவன், சாந்தி, ராசன், சுகந்தி, ஜெயந்தா, தாசன், ஜெயா, கண்ணன், சுரேஸ், தாமிணி, கிருஷாந்தன் ஆகியோரின் பெரிய தாயாரும்,
நவமணி, காலஞ்சென்ற தவபாலன், வேல்மன்னன், சிவமணி, தவமணி, ஜெயக்குமார் ஆகியோரின் மூத்த மாமியும்,
சுமணகுமாரி, நதீஸ், கௌசி, சுபாஸ், இந்துஜா, லக்ஷன், மிதுலன், வேனுஜா, பாமினி, சன்யுதா, வஜ்ஜிரன், சகிஸ்ணன், கன்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இந்துஜன், தேனுஜா, ஆகேஷ், ஆகாஷ், மகிஷா, நிகிஷா, பவிசனா, தர்சிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 23-12-2019 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கருதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தங்கையின் பிள்ளைகள் எம்மை தன் பிள்ளைகள் போல் மடியில் சீராட்டி வளர்த்தீரே. வாடிய எமது முகம் கண்டதும். வாரி அணைத்து வயிறாற சோறூட்டினீங்களே. உங்களை மறப்போமா பெரியம்மா. காலனுக்கு இது எங்கே புரியும்....