

கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
கோகிலா, தவசீலன் ஆகியோரின் தெய்வீகத் தந்தையும்,
கோமளகாந்தன், கிருபானந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகேந்திரம்(கந்தசாமி), ஆறுமுகம், கிருஷ்ணர்(கிட்டிணன்) ஆகியோரின் உடன்பிறந்த உயிர்ச் சகோதரரும்,
பிரியங்கா, ஜெனார்த்தனன், பிருந்தா ஆகியோரின் செல்லக்குட்டித் தாத்தாவும்,
துர்க்கா, ஷகித் ஆகியோரின் ஆசைக்குட்டி அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுமோட்டை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.