Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
ஈழத்து கவிஞர், நாட்டுப்பற்றாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர்
விண்ணில் - 22 DEC 2020
அமரர்கள் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், தவமணிதேவி சிவசுப்பிரமணியம் 2020 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
மண்ணில்
: 26 MAY 1946 விண்ணில் : 22 DEC 2020

கிளிநொச்சி பளை தம்பகாமத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமரர் தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
பிறப்பு :
 20 FEB 1944 இறப்பு: 29 DEC 2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணிதேவி சிவசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்ந்த நாட்களை
 வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
 உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
 உடைந்தது எங்கள் இதயமும்தான்!
 நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
 நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
 உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!

அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
 என்புருக ஏங்கிட்டு பார்க்க
 எம்மை துயரிலே மூழ்க வைத்து
 பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?

சோகத்தின் சுமைதனை
 சுமக்கின்றோம் இதயமதில்
 பாசத்தின் உறவுகள் நாம்
 பரிதவித்து வாடுகின்றோம்
 நேசத்தை மறந்து ஏன்
 இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்? 

நீங்கள் பிரிந்து ஐந்து வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது

உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால்
உங்கள் உயிர் என்றும் எங்களுடன் தான்
வாழ்ந்து கொண்டிருக்கும்

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே அம்மா அப்பாவே!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்