

திதி:07/06/2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Vancouver, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள்
அடைபட்டு இன்புற்று இருந்த இனிய
வசந்த காலம் எங்கள் இதயத்துள்
இன்பவலியாய் எமக்குள்ளே
ஆன்மாவை அச்சுறுத்த ஏன்? எங்கே?
பிரிந்து போனீர்கள்! நீங்கள் இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது துடைக்க
நினைக்கும் விரல்கள் எரிகிறது தன்னை
உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே...
பிள்ளைகளும் மனைவியும் உமை
நினைத்து வாடிடவே போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து! அப்பா என்று
அழைக்க நீங்கள் இல்லையே அடி
மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள்
நினைவுகளில் கலந்தே இருக்கும்
உங்கள் நினைவுகள் அப்பா!
அன்புள்ள தாத்தாவே அப்பப்பாவே
உங்களைப் போல் ஒருவரை நாம் சந்தித்ததில்லை
அன்பில் அறிவில் ஆற்றலில் உங்களுக்கு
நிகர் நீங்களே உங்கள் நினைவுகள்
என்றும் எம் இதயத்தில் நிறைந்திருக்கும்
என்றும் எங்கள் மனதை விட்டு நீங்காத தெய்வமே
எங்கள் நல்வாழ்வுக்கு என்றும் உங்கள் நல் ஆசிகள்
எங்களை விட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்றாயினும்
உங்களின் இனிய நினைவுகளைச் சுமந்து நிற்கின்றோம்
தேறவழியுமில்லை தேற்றுதற்கு யாருமின்றி புலம்புகின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வானுலகு சென்ற எங்கள் அன்புத் தெய்வமே
என்றும் உங்கள் பாச நினைவுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ..!
our deepest condolences and sympathies--Thavam Family Australia