

யாழ். புங்குடுத்தீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டி, நோர்வே ஆகிய இடங்களை வதிவிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயவரதன்(வரதன்- டென்மார்க்), காலஞ்சென்ற சுரேந்திரன்(சுரேஷ்), கெங்காதரன்(கெங்கா- டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனிதா(டென்மார்க்), சுவேந்தினி(லண்டன்), ராதிகா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுதா, றஞ்சி, விஜி, சுபா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
பொன்னுச்சாமி(கனடா), காலஞ்சென்ற சிங்கராசா, அருளானந்தம்(இலங்கை), செல்வமலர், புஷ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈஸ்வர், ஆதவன், அபிராமி, புருஷோத்தன்(கைனு), மஞ்சுபாரதி, பகலவன்(விஷ்னு- டென்மார்க்), சுதர்னா(இலங்கை), சுதன்ஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்ஷன், ஜேமி(டென்மார்க்), ஆஷா, அக்சரா(இலங்கை), சித்தார்த்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை Hernings sygehus kape, Overgade 2, 7400 Herning, Denmark எனும் முகவரியில் கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.