Clicky

பிறப்பு 03 FEB 1936
இறப்பு 23 DEC 2018
அமரர் கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை (முருகனடியான்)
B.Sc., Dip. Ed., Sleas CI, II. Teacher Counsellor, Principal Emeritus- J.C.C, நயினைக் கவிஞர், ஓய்வுநிலை அதிபர்- யாழ். மத்திய கல்லூரி,நயினாதீவு மகாவித்தியாலயம், செயலாளர் தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
வயது 82
அமரர் கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை 1936 - 2018 நயினாதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 DEC 2018 United Kingdom

யாழ் மத்திய கல்லூரி தனது மிகச் சிறந்த புதல்வனை இழந்து தவிக்கிறாள். இன்று மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாகவும் பலகட்டடங்களுடன் விளங்குவதற்கும் இவரே காரணகர்தா. பின்வந்தவர்கள் அத்தேசிய பாடசாலைக்காக வருடாந்தமாக ஒதுக்கப்பட்டு வந்த நிதியை ( பிரச்சனை காரணமாக விடுவிக்காமல் சுமார் 7 வருடங்களின் பின் மொத்த நிதியும் விடுவிக்கப்பட்டது) பயன்படுத்தி கட்டடங்களை எழுப்பினார்கள். 1990களில் கோட்டை பிரச்சனை காரணமாக பாடசாலை இழுத்து மூடி புனித பத்திரியார் கல்லூரிக்கு நகர்த்தும் முடிவை சாமர்த்தியமாக தவிர்த்து இடிந்த கல்லூரியிலேயே தொடர்ந்தும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததுடன் அக்காலத்தில் படித்த மாணவர்களைக் கொண்டே பலகட்டங்களையும் தளபாடங்களையும் சீர்படுத்தி நடத்திச் சென்றார். இவ்வளவு கஸ்டங்களுக்குள்ளும் படிப்பு , விளையாட்டு என்பன மீள்கட்டியெழுப்பப்பட்டதுடன் இவரினால் வளர்க்கப்பட்டவர்களால் 1997ல் பெற்றெடுக்கப்பட்ட 4-4A யுடன் பல முன்னனி பாடசாலைகளை பின் தள்ளி யாழ் மாவட்டத்தில் A/Lல் முதல் இடத்தை கைப்பற்றியது. 175வது வருட நிகழ்வை மிகச் சிற்பாக நடத்திக் காட்டியதுடன் அதற்காக அன்று ( பாடசாலை வரலாற்றை சீரமைத்து தொடக்க ஆண்டு 1834 என்றிருந்ததை மாற்றி உண்மையான தொடக்க ஆண்டு 1817 ஆக மாற்றியவர்) தமிழிழ தேசியத் தலைவரிடத்திலிருந்து விசேட வாழ்த்து மடலையையும் பெற்றுக் கொடுத்தவர். இவற்றை எல்லாம் இவறால் செய்து முடிப்பதற்கு இவர் தனியே அதிபராக இருந்தது மட்டும் காரணமல்ல அவர் எமது கல்லூரியின் பழையமாணவராகவும் இருந்தமையும் ஒரு காரணமாகும். இவரின் மிகச் சிறந்த குணம் அன்பினால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என உணர்த்தியவர். நான் இப்பதிவில் இட்டது மிகச் சிறியனவற்றை. அக்காலத்தில் படித்தவர்களக்கு தெரியும் அவர் எவ்வளவற்றை செய்துகாட்டியவர் என்று. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் இவரின் பிரிவில் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.