யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் முதல் மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, வள்ளியம்மை(வர்த்தகர்- நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாசனிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மசோதி(கப்டன் வானதி), கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குலமோகன், நீலானந்தசிவம், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவராமலிங்கம்(ஓய்விபெற்ற அதிபர்), குமாரசூரியர்(ஓய்வு நிலை தபால் அதிபர்- நயினாதீவு) மணிமேகலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காந்திமலர், சிவபாலன், மங்களேஸ்வரி, தவமணி தேவி, நிர்மலாதேவி, லலிதாம்பாள், சபாநாதன், ஸ்ரீதரன், ஸ்ரீபதி, அருள்மொழி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஓங்காரநாதன், மற்றும் தில்லைநாதன், இராசலிங்கம், தவமலர், சிவானந்தன், கெளசல்யா, கெளரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சரணியா, சரணியன், அபிமன்யு, அருவி, ஆரணி, வான்கோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலஞ்சென்ற என் தந்தை திரு் க. சபா-ஆனந்தர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியபோது 1966-67ல் நான் திரு சண்முகநாதபிள்ளையிடம் மாணவராக இருந்தேன். கண்டிப்பானவரானாலும் அன்புடன் நடத்தி...