யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மல்லாவி, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி, மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
தூயதிரு தனிநாயகம் அடிவந்த தூயவா
யாதுமாகி நின்றவர்கள் தாழ்பணிந்து வாழ்ந்தவா
சேயாகி செந்தமிழைத் தாங்கிநின்ற மூத்தவா
நோய் வந்து இருந்ததில்லை நொடிப்பொழுதில் மறைந்ததேன்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மணியகாரன் பேரனாய்!
வாழ்வின் பண்புடனே வம்சத்தின் நாயகனாய்!
தாழ்பணிந்து நெழுவினியான் அருள்பெற்று வாழ்ந்தவேரே!
ஆழ்மன உறுதியுடன் ஆனந்தமாய் உயர்ந்தவரே!
உங்கள் அன்பு பெற்றோருடன், நிறை தலைமுறை தாங்கியவாறு நற்பணியாற்றி,
அன்புமிகுந்தவர்களான; உடன் பிறந்தோற்கும்,
உயிரன்பு மனைவிக்கும், மைத்துனர்களுக்கும், பிள்ளைகட்கும்,
மருமக்கள், பேரர்கள், பூட்டப்பிள்ளைகட்கும்
உற்ற நல் உறவினர்கட்கும், நண்பர்களுக்கும்
உண்மையின் வழிகாட்டியாய் உயர்ந்திட்ட பெரியோனே!
அன்பையும் அறத்தையும் அகத்தில் நிறைத்து
என்றும் இனிதான சிந்தனை வளர்த்து
நன்றாய் வாழ்ந்து நலமெலாம் நிறைந்து
குன்றாய் உயர்ந்த குலவிளக்கு நீங்கள் ஐயா!
பிறந்த பெருமைதனை நிறைத்து வாழ்ந்தவரே
அறத்தின் மகிழ்வும் ஆன்மீக உணர்வுமாய்
திறங்கள் பலபெற்று தெய்வீக அருள்நாடி
தினமும் திருக்கோவில் வலம்வந்த தெய்வமே!
அன்றொருநாள் ஆண்டவன் அசரீரியில் மனம்பதித்து
தென்றுதொட்ட வரலாற்றில் தெய்வத் திருவருள் நாடி!
என்றும் நல்லருள் பொழியும்! நாகதம்பிரான் கோயிலமைத்து! குன்றாத மனதோடு இறை பூஜை வழிபாட்டில் மகிழ்ந்த எங்கள் தெய்வமே!
பத்திரமாய் இருங்களென பண்பாடு சொல்லித்தந்து!
நித்திரையாய் சென்றதேனோ! நெஞ்சம் கலங்குதய்யா!
வித்தகமாய் உங்களது நித்திய வாழ்வினிலே!
முத்திரை பதித்தீர்கள் முழுமன உழைப்பினால்!
இத்தரையில் நாம் வாழும்வரை என்றும் மறவோம் ஐயா!
பற்றாக பாசம் வைத்து நூற்று இரண்டு அகவைகள் கடந்து!
நூற்றுமூன்றில் கால்பதித்து உயர்கையிலே ! எமைப் பிரிந்து சிவபாதமடைந்ததேனோ !
எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்திக்காய் எல்லாம்
வல்ல தெய்வங்களையும், ஐயா தினந்தோறும் வணங்கி வந்த நாகதம்பிரானையும் பணிந்து! கண்ணீர்
பூக்களை காணிக்கையாக்கி இறை நிழழில் இளைப்பாற பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Condolences to all your family and friends. Pariyathatha will always be in our hearts.