மரண அறிவித்தல்
மண்ணில் 25 APR 1919
விண்ணில் 12 MAY 2021
திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் 1919 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மல்லாவி, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி, மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ்ப்பாணம் நெடுந்தீவு இருமரபும் தூயதிரு தனிநாயகம் அடிகளாரின் வழித்தோன்றலும் மணியகாரன் பேரன் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதர் பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, கற்பகம், காமாட்சி, செங்கமலம், குமாரசாமி, குணநாயகம்(Paris), இரகுநாதர், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, அம்பலவாணர், பெருமையினார், விஷ்வநாதன், சின்னத்தங்கம், நாகம்மா இலட்சுமி(Paris), இராசமணி(இலங்கை), அம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலட்சுமி, புஸ்பவதி, நடேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காசிலிங்கம், காலஞ்சென்ற ஜெகநாதன், ஸ்ரீ மாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுவநேசன், விஜிதா, கிரிஷா, லிங்கேசன், குகநாதன், சுதாநாதன், துளசிகா, சோபிகா, திருவளவன், கஜவாணன், சிறீவிசித்திரா, பகீரதன், பத்மசிறீ, சகிலா, ஜெயந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

யதுலன், ஆரபி, கஜீபன், கஜிந்தன், கஸ்தூரி, லதுஷன், இந்துஷா, கீர்த்திகன், சங்கஜா, கபிஜன், சுடரினி, தரணிதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிக்கு துர்காபுரம் மல்லாகம் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணிக்கு அக்கராயன் குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணநாயகம் - சகோதரன்
நடேசலிங்கம் - மகன்
நேசன் - பேரன்
குகன் - பேரன்
சுதன் - பேரன்
யுவநேசன் - பேரன்
விஷ்வசீதா அட்சரநாதன் - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos