

முல்லைத்தீவு கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குட்டித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கணேசம்மா(முன்னைநாள் ஆசிரியை கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(அதிபர்), காலஞ்சென்ற பங்கையச்செல்வி, நரேந்திரன்(கிராம உத்தியோகத்தர்- முள்ளியவளை மத்தி), சுரேந்திரன்(உள்ளுராட்சி உதவியாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை), கலைச்செல்வி(ஜேர்மனி), தமிழ்ச்செல்வி(பிரான்ஸ்), தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரா, சிவமதி(ஆசிரியை- வவுனியா), மாலினி, தவராஜா(ஜேர்மனி), றஜிதனன்(பிரான்ஸ்), கைலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லக்கண்டு, துரைசிங்கம்(கணுக்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற அருணாசலம்(ஓய்வுபெற்ற மக்கள்வங்கி முகாமையாளர்), மகாலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), லோகசெளந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற கணக்காளர்), தேவலிங்கம்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துலாஞ்சலி, நதீசன், கிருஜன், வித்தகி, அறிவரசி, அனிஷன், சுவாதி, சுவர்ணி, வினோத், சிந்தியா, மதீஸ், தமிழரசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.