

யாழ். புலோலி தெற்கு சிங்கை நகரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வல்லை வீதியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கிளி நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆருயிர்த் தெய்வமே
என் அன்பார்ந்த உத்தமரே
எங்கள் அகல் விளக்கு அணைந்ததென்ன
உங்கள் பூமுகம் எங்கே
உங்கள் புன்சிரிப்பெங்கே
எங்கள் அழியாச் சொத்து
அலைமோதிப் போனதென்ன
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றேன்!
எங்கள் அன்புச் செல்வமே
பாசமுள்ள அப்பாவே
எங்கள் அருகிருந்து
எமை வளர்த்து ஆளாக்கி
கல்வி பயில வைத்து
கடைத்தேறும் வேளைதனில்
எம் கடமை செய்யும் முன்னே
எமை விட்டுப் பிரிந்ததென்ன
பெற்றவரை இழந்திங்கு
பெரும்பாவி ஆகிவிட்டோம்!
ஆற்றாது கண்ணீர்
அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும்
பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம்
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை
மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!!
அன்னாரின் ஆத்மா அமைதியுடன் இளைப்பாற பிராரத்திப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் சகோதர்ர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்