Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1946
இறப்பு 01 MAR 2019
அமரர் கணபதிப்பிள்ளை மாணிக்கம்
ஓய்வுநிலை மாவட்ட இணைப்பாளர், பனை அபிவிருத்திச் சபை, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 72
அமரர் கணபதிப்பிள்ளை மாணிக்கம் 1946 - 2019 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புலோலி தெற்கு சிங்கை நகரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வல்லை வீதியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கிளி நகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர்(ஓய்வுநிலை அதிபர்- திருவையாறு மகா வித்தியாலயம், கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளி மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன்(ஜேர்மனி), சுனேதா(ஆசிரியை- பூவரசங்குளம் ம.வி, வவுனியா), சஞ்சீவன்(பிரான்ஸ்), விதுசன்(இயக்குனர்- Asian Broad Casting Pvt Ltd, Dream of Asia) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா(ஜேர்மனி), காந்தரூபன்(T.O Civil) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னம்மா, சின்னராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற குமரேசு, சிவலிங்கம்(பின்லாந்து), சற்குணவதி, விஜயகுமார்(பொன்ராசா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பூமலர்(நோர்வே), சுப்பிரமணியம்(ஆதவன் அரிசி ஆலை), யோகராணி(பின்லாந்து), சின்னராசா, ரதி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதுசன், நிருபனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

நதிசன், ஜஸ்மிகன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று விளையாட்டரங்கு வீதி கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்