5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை இலட்சுமி
1937 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே எங்கள்
இதயங்களில் கோயிலாய்
வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில்
உங்கள் நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
அகவை 5 அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம்
அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன்
நாம் வாழ ஏணியாக
இருந்திடுவீர் அம்மா!
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள்
எங்கே முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்