Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JAN 1928
இறப்பு 20 JAN 2011
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி 1928 - 2011 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டுதான் இருக்கின்றது அப்பா
எங்களுக்குத் துணையாய் எங்களைத் தாங்கும் தூணாய்
எங்களோடு நடைப்பயணம் நடத்துவீர்கள் என்று
நாம் எல்லாம் நம்பியே இருந்தோம்
ஆனால் எந்தவித சலனமும் காட்டாமல்
சாவுக்கு சம்மதப்பட்டதேன் அப்பா

அப்பா உங்கள் பாசம்
உருகாத நெஞ்சங்களையும் உருக வைக்கும்
சொரியாத கண்களையும் கண்ணீர் சொரிய வைக்கும்
நீங்கள் எங்களை விட்டு தெரியாத
இடம் தேடி பறந்ததேனப்பா?

கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே...

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் உங்கள் குடும்பத்தினர்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!

தகவல்: K. செல்வக்குமார்