யாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மா!
உங்களை நினைக்கும் போது
வரும் கண்ணீரை நாங்கள்
துடைத்தாளும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது..
காலங்கள் பல கடந்தாலும் கண்மணிகள்
நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறைவரம்
ஏதும் தாரோயோ அம்மா...
உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது
ஓவ்வொரு நொடிப் பொழுதும்
நாங்கள் ஏங்குகிறோம் அம்மா
உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...
கண்ணுக்குள் மணிபோல் இமைபோல்
காத்தோயே அம்மா...
உங்களை காலன் எனும் பெயரில்
வந்தகயவன் களவாடி சென்றதேனோ...
நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விழிகள் உங்களையே தேடுகின்றது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.