யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை அமிர்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எம் வாழ்கையின் கலங்கரை விளக்கே
எம்மை விட்டு பிரிந்து ஓராண்டு ஆகியுமே
எம் மனம் கணமாகவே இருக்கின்றதே அம்மா.
உங்களுடன் சேர்ந்து வாழ காலம் எனக்கு
இடமளிக்கவில்லை அம்மா.
பிரிந்த காலத்தில் ஒரு நொடியும் உம்மை
மறந்ததில்லை அம்மா.
எம்மை எப்படி பாராட்டி சீராட்டி
வளர்த்தாய் அம்மா.
எம்மை மாத்திரமா அம்மா.
யாராவது சாப்பிடாவிட்டால் உங்கள்
மனம் பொறுக்காதே.
மற்றவரை உபசரிப்பதற்கு உங்களுக்கு
உலக சாதனை விருதே
கொடுக்கலாம் அம்மா.
அப்படி பார்த்தால் உங்கள் அளவுக்கு
நாங்கள் யாருமே இல்லையம்மா.
கவிதை எழுத பேனாவை எடுத்தால்
கண்கள் குளமாகி காகிதம்
தெரியவில்லை அம்மா.
கோடி உறவுகள் எமதருகில் இருந்தாலும்
உம்மிடத்தை ஈடுசெய்ய யாருமில்லை அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை
வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!