6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1947
இறப்பு 17 JUN 2016
அமரர் கனகாம்பிகை செல்வநாயகம்
வயது 69
அமரர் கனகாம்பிகை செல்வநாயகம் 1947 - 2016 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை செல்வநாயகம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 25-06-2022

உடலில் சுமந்து உதிரத்தை உணவாய் ஊட்டி
உன் உயிரை பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!

இன்று எம் உடலும் உயிரும் உன்னையே
அழைக்கின்றது அம்மா அம்மா என்று

வாழும் காலத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த எங்கள் தெய்வமே!

ஆறாண்டு காலம் உருண்டோடி விட்டது
நம்ப முடியவில்லை
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே!
ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக!

கள்ளமில்லா சிரிப்பும் கனிவான உங்கள் பேச்சும்
வார்த்தைகள் கொண்டு நாம்
வர்ணிக்க முடியாதவை அம்மா!

ஆண்டு ஆறு சென்றாலும் ஆறாது எங்கள் மனம்
கண்ணீர் பூக்களால் காணிக்கை செய்து
உங்கள் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்