
-
15 SEP 1939 - 22 MAR 2021 (81 வயது)
-
பிறந்த இடம் : கந்தரோடை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கந்தரோடை, Sri Lanka கண்டி, Sri Lanka கொழும்பு, Sri Lanka
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனக புவனேந்திரநாதன் அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை பாருப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி(கனடா), Dr. ஆதவன்(சத்திரசிகிச்சை நிபுணர்- கொழும்பு போதனாவைத்தியசாலை), சகுந்தலவாணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரவிச்சந்திரன்(கனடா), சிவசக்தி(கொழும்பு), கிரிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெண்ணிலா(கனடா), பெளர்ணமி, செங்கதிர்(கொழும்பு), கீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற நாகேந்திரநாதன், சோதிநாதன், அற்புதமலர், ஞானமலர்(லண்டன்), மங்களேஸ்வரி, கோமளேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அற்புதராணி, பொன்மலர் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற வோட்டேர்ஸ், சுகேந்திரன், விமலாதேவி, சரவணபவானந்தன், ஜெயந்தினி, பாலகணேஷ் ஆகியோரின் அன்புச் மைத்துணரும்,
அன்னாரின் திருவுடல் 24-03-2021 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பி.ப 03:00 மணிமுதல் 09:00 மணி வரையிலும் பின்னர் 25-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணி முதல் 09:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கந்தரோடை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எமது ஆசிரியரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.